வெசாக் பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம்

0

எதிர்வரும் 26 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம் ஏற்படும் என ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணம் இலங்கை முழுமையாக அல்லது பாதியளவில் இலங்கைக்கு தென்படலாம் என்பதுடன் இறுதி சில நிமிடங்கள் இலங்கையர்கள் அதனை பார்க்கலாம் எனவும் ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் கூறியுள்ளது.

இலங்கையில் மாலை 6.23 முதல் இரவு 7.19 வரை 57 நிமிடங்கள் சந்திர கிரகணம் தென்படும்.

சந்திர கிரகணத்தை முழுமையாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.