வெற்றிலை எச்சில் துப்பிய பெண் – பலருக்கும் சிக்கல்

0

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தலுக்காக ஏற்றிச்சென்ற பஸ்ஸிலிருந்து தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெற்றிலை எச்சிலைத் துப்பிய நிலையில் எச்சில் விழுந்த இருவர் உட்பட அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் சிலர் அண்மையில் விசேட பஸ் மூலம் பலங்கொடை சமனலவெவ பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது பலங்கொடை கல்தொட்டை, மிரிஸ்வத்த பகுதியில் வைத்து அந்த பஸ்ஸின் ஜன்னலைத் திறந்த கொரோனா தொற்றுடைய பெண் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியுள்ளார்.

இதன்போது பஸ் அருகே பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் மீது இந்த வெற்றிலை எச்சில் பட்டுள்ளது

இதனை அடுத்து பொதுசுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப் பெற்று தற்சமயம் வீடுகளில் அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.