வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் விசாக்களை நீடிக்குமாறு கோரிக்கை

0

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் விசாக்களை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்குலக நாடுகளின் தூதுவர்களை நேற்று(புதன்கிழமை) சந்தித்த வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத்த ஆரியசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தூதுவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வௌிநாட்டவர்களின் நிலை தொடர்பிலும் அவர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.