வெளிநாடுகளில் இருந்து வரும் எவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது: அனில் ஜாசிங்க

0

வெளிநாடுகளில் இருந்து வரும் எவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் PCR பரிசோதனையை விமான நிலையத்தில் நிராகரித்து இன்று அதிகாலை நாட்டிற்குள் பிரவேசித்ததாக வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் வினவிய போதே, விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், குறித்த இராஜதந்திர அதிகாரி இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ தமக்கு அறிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.