வெளிநாடுகளில் உள்ள பணத்தை நாட்டிற்கு கொண்டுவருமாறு கோரிக்கை

0

வெளிநாடுகளில் உள்ள பணத்தை நாட்டிற்கு கொண்டுவருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்‌ஷ்மனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில், நாட்டு மக்கள், வௌிநாடுகளிலிலுள்ள இலங்கையர்கள், இலங்கையை நேசிக்கும் வௌிநாட்டவர்கள், வௌிநாட்டு இருப்பு மற்றும் நிதியத்தை, இலங்கையின் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்.

நாட்டின் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் சிறப்பு நிதி நிறுவனங்களுக்கு, அவற்றை முன்னெடுத்துச் செல்ல விசேட நிவாரணங்கள் வழங்கப்படும்.

அது தொடர்பில் காணப்படும் அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்தவும், எந்த வரியும் வசூலிக்கக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தில் இருந்து நிதியை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு, நேற்று முதல் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை முகங்கொடுப்பதற்கு இது பாரிய ஒத்துழைப்பை வழங்கும்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குறித்த நிதி விதிமுறைகளை தளர்த்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.