வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகைகள்!

0

கொரோனா தாக்கத்தினால் தமது தொழில்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மீண்டும் அதே நாட்டில் தொழில்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த புதிய நடைமுறை கடந்த 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டத்தின் மூலம், கொரோனா தாக்கத்தினால் தமது தொழில்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மற்றும் தமது ஒப்பந்தக் காலம் நிறைவுற்ற நிலையில் நாடு திரும்ப முடியாத நிலையில் காணப்படும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மீண்டும் தொழில்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.