வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களுக்கான விசேட செய்தி!

0

வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் தங்களை பதிவு செய்து கொள்வது கட்டாயமனது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களது அருகில் உள்ளவர்களின் நலன் கருதி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.