வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவிப்பு

0

மீள் அறிவித்தல் வரை வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தபால் திணைக்களம் அனைத்து தபாலகங்களுக்கும் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.