வெள்ளவத்தையில் தீவிரமடையும் கொரோனா

0

நாட்டில் நேற்றையதினத்தில் மாத்திரம் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்புமாவட்டத்தில் நேற்றைய தினத்தில் 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்காகதேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, வெள்ளவத்தைபகுதியில் 65 பேரும், பொறளை பகுதியில் 54 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 126 பேரும், கண்டி மாவட்டத்தில் 42 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேருக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.