வெள்ளை வானில் 20 வயது யுவதி கடத்தல்

0

யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.