வெவ்வேறு வடிவங்களில் தொடரும் இன அழிப்பு – அருட்தந்தை சக்திவேல்

0

யுத்தம் முடிவடைந்துவிட்டதாக கூறப்பட்டாலும் கூட இன அழிப்பு என்பது வெவ்வேறு வடிவங்களில் இடம்பெற்று கொண்டு தான் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் என்ன நடக்கின்றது என்பதை மனித உரிமைப் பேரவை சிந்திக்காமல் இருக்கிறது.

2009ஆம் ஆண்டு வரைக்கும் நடந்தது யுத்தக் குற்றம் என்பதை கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

அதனை சாதாரண மனித உரிமை பிரச்சினையாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.