வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

0

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்த பணிகள் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆட்சேபனை தெரிவிப்பதற்காக நண்பகல் 12 முதல் பகல் 1.30 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேட்புமனுவை கையளிக்கும்போது, ஆதரவாளர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ அழைத்துவருவதை தவிர்க்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேட்புமனுவை கையளிக்கும் நபருடன் மேலதிகமாக ஒருவர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என பொலிஸார் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்காக 357 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

பொதுத் தேர்தலை முன்னிட்டு 126 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

நேற்று மாலை வரை 124 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்ததாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.