வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரிக்கை!

0

ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும், அவ்வாறானவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட 19 மாவட்டங்களிலும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.