வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குவைட், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாகவும் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வெளிநாடு செல்வோர் பைஸர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.