அரசாங்க வேலை வாய்ப்பு திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் உள்ள பிரதேச செயலகங்களில் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீடுகளை செய்யலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் www.pubad.gov.lk என்ற இணையதளத்தில் மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழில் பெறும் பட்டதாரிகள் எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 1 இலட்சம் பேரை தொழில்களில் அமர்த்தும் பணிகள், அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.