வேல் கொண்டு வீட்டில் பூஜை செய்வதனால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

0

நமது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை அனைத்தையும் போக்க முருகப் பெருமானது வேல் துணை புரிகின்றது.

அதேபோல வேல் கொண்டு வீட்டில் பூஜை செய்வதனால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

வேலை வழிபடும் முறை

முருகன் கோயில்களில் விற்கப்படும் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட சிறிய அளவிலான வேல் ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த வேல் வாங்கிய முருகப்பெருமான் தலத்தில், சிறிய வேலாயுதத்தை உங்கள் கையில் வைத்திருந்தபடி முருகப்பெருமானை வழிபட வேண்டும்

உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் ஒரு புதிய சிகப்பு நிற துணியை விரித்து, அதன் மீது ஒரு வெள்ளிக் கிண்ணம் அல்லது பித்தளை, செம்பு கிண்ணத்தில், புதிய பச்சரிசியை நிரப்பி அந்த வேலை அதில் நட்டு வைக்க வேண்டும்.

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ அல்லது சுபமுகூர்த்த நாளிலோ உங்கள் பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் வேலையை கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

பிறகு காய்ச்சப்படாத சுத்தமான பசும்பால் கொண்டு அந்த வேலுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சாதாரண நீரை கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்து தூய்மைப்படுத்த வேண்டும்.

இதன் பின்னர் அந்த வேலையை ஒரு தூய்மையான துணி கொண்டு துடைத்து, மீண்டும் வெள்ளிக் கிண்ணத்தில் புதிய பச்சை அரிசி போட்டு நிரப்பி, அதில் அந்த வேல் நட்டு வைக்கப்பட வேண்டும்.

இதன் பிறகு அரைத்த சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமத்தை அந்த வேலின் இரண்டு பக்கமும் பொட்டு வைக்க வேண்டும்.

அதன் பிறகு வாசமுள்ள விபூதியை அந்த வேலின் மீது அபிஷேக பொடி போன்று சிறிது தூவி விட வேண்டும்.

இவை எல்லாம் முடிந்ததும் முருகனின் வேல் நட்டு பட்டிருக்கும் கிண்ணத்தில், முருகனுக்கு விருப்பமான பன்னீர் ரோஜாப்பூக்கள் அல்லது செவ்வரளி பூக்களை சமர்ப்பித்து, கற்கண்டு, அவல், பொரி கடலை அல்லது பழங்கள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, தீபதூபம் காட்டி முருகனுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் அல்லது கந்தசஷ்டி கவசம் படித்து வழிபட வேண்டும்.

நன்மைகள்

முருகனின் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் 21 நாட்கள் திட சித்தத்துடன், உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண சுத்தியுடன் செய்து வருவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் தீருவதற்கான வழி பிறக்கும்.

தொழில், வியாபாரம் அல்லது இன்ன பிற விடயங்களில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

செவ்வாய் தோஷம் ஏற்பட்டு நீண்டகாலமாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல அழகான, ஆரோக்கியமான குழந்தைப் பேறு கிடைக்கும் என்பதுடன் உங்களையும் வீட்டையும் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் ஒழியும்.