வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள 24 மணித்தியால தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
1989 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்கள் தொடர்பான தகவல்களை உறவினர்கள் அறிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.