வௌிநாட்டு பிரஜைகளின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

0

நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டு பிரஜைகளின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து வகையான விசாக்களுக்குமான செல்லுபடிக் காலம் மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு கடந்த 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை 09 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.