ஶ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

0

சர்வதேச ரீதியில் சரக்கு விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

சர்வதேச ரீதியில் பெரும்பாலான சரக்கு விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்துவதற்காக வாரம் ஒன்றுக்கு 27 சரக்கு விமான சேவைகளை மேற்கொள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இந்த செயற்றிட்டத்தின் கீழ் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சரக்கு விமான போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.

லண்டன், சீனாவின் பீஜிங், அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன், சிங்கப்பூர், ஜப்பானின் டோக்கியோ, மத்திய கிழக்கின் தோஹா மற்றும் டுபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது சரக்கு விமான சேவையை முன்னெடுக்க உள்ளது.

இதற்காக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான A 320 மற்றும் A 330 ஆகிய எயார்பஸ் ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.