ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடவுள்ளது.
கொழும்பு, டாலி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
பொதுத்தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.