ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று!

0

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் மைத்திரிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பின்னணியிலேயே இன்றைய தினம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.