இன்றைய இளையதலைமுறையினர் சோறு தண்ணீர் கூட இல்லாமல் இருந்துவிடுவார்கள்.
ஆனால் ஸ்மார்ட்போனும் இணையமும் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் அதுவே அவர்களுக்கு வினையாக மாறிவருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் அமைந்துள்ள ஹென்றி போர்டு மருத்துவமனையின் முன்னணி மருத்துவர்கள் 14 முதல் 17 வயதுடைய 335 ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், எவ்வளவு அதிகமாக இணையத்தை பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக ரத்த அழுத்தமும் உடல் எடையும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
வாரத்திற்கு சராசரியாக 25 மணி நேரம் இணையத்தை பயன்படுத்தும் 134 பேரில் 26 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது.
அதேபோல் அவர்களில் 46 சதவீதம் பேர் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.