ஸ்ரீதரனுக்கு கொரோனா? யாழ்.வைத்தியசாலையில் அனுமதி!

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அவர் கொரோனா பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நேற்றைய தினத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை நோவு காரணமாக இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

அவருக்கு கோரானா தொற்று அறிகுறி உள்ளமையால் அம்பியூலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று முற்பகல் அனுப்பிவைக்கப்பட்டார்.

அவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.

அவருக்கு உரிய முதலாம் கட்டப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

அதன்பின்னரே அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பது பற்றி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்