ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாளய பட்ச விசேட பூஜைகள்!

0

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாளய பட்ச விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் விசேட பூஜைகளும் நடைபெற்றன.

கொரோனா அச்சுறுத்தல்காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பிதிர்க்கடன்களை தீர்க்கும் வல்லமைகொண்ட ஆலயமாகவும் தீர்த்தக்குளத்தினையும் கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள் பித்ரு சாபம் நீங்கி அவர்களுடைய ஆசீர்வாதத்தை பரிபூரணமாகப் பெறுவார்கள்.

அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், தவற விட்டவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்றைய நாளில் தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு சாபம் ஏற்படாமல் இருக்கும்.

முன்னோர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்வில் எத்தகைய துன்பங்களும் அண்டுவதில்லை என்பது ஐதீகமாகும்.