ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அவருடன் இணைந்து பணியாற்றிய ஏனைய ஊழியர்கள் சிலரை தனிமைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாத்திரம் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரியும் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.