ஹக்கீம், ரிசாட், திகாம்பரம் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஆயத்தம்?

0

சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன் மற்றும் பழனி திகாம்பரம் போன்றவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஆயத்தமாகி வருவதாக தெற்கு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு இவர்கள் ஆயத்தமாகி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த மூன்று தலைவர்களினதும் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் பத்து பேர் வரையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏதேனும் ஓர் காரணத்தினால் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சியேனும் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கத் தவறினால், ஹக்கீம், ரிசாட் மற்றும் திகாம்பரம் போன்றவர்கள் ஆதரவளிக்க ஆயத்தமாகி வருவதாக குறித்த ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.