​கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

0

கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்காக 500 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான முதலீடுகளை வழங்க ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஒன்றிணைந்த நிதியத்திடம் காணப்படும் நிதியை செலவிடுவதற்கான அதிகாரம் திரைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள சுற்றுலா, ஆடை கைத்தொழில், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கான கடனை மீள செலுத்த 6 மாதங்கள் சலுகை காலம் வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பணி முதலீட்டுக்கு 4 வீத வட்டியின் கீழ் கடனை வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலின் செலவுகளுக்காக 8 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கிடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.