அத்தியாவசிய சேவைகளுக்காகப் பயணிக்கின்றவர்களுக்காக மாத்திரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்றன.
இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பண்டுக சுவர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
தொடருந்து போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மேல் மாகாணத்தில் 103 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.