அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன. புதிதாக எவரும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள்.
அத்துடன், சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.