அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா வரவேற்பு

0

ரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தனது வரவேற்பினை தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணிப்பிரச்சினை, காணாமல் போனோர் விவகாரம், 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம், புலம்பெயர் மக்கள் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட்டதாக கூட்டமைப்பினர் இந்திய பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் குறித்து இந்தியா தொடர்ந்தும் கரிசனையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.