அரசு நாணய நிதியத்தின் உதவியை நாடுவது தவறில்லை – அமைச்சர் அமரவீர

0

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது  தவறில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிலைமையில் அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரேயொரு மாற்று வழி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது மாத்திரமே. இருந்தபோதிலும் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் அனைத்து நிபந்தனைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளாா்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

திறைசேரியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனா்.   சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா இல்லையா  என்பது தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ள இரண்டு முறைகள் காணப்படுகின்றன. அவற்றில்,  ஒன்று சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லலாம் அல்லது இரண்டாவதாக நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளாா்.