அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
வெள்ளை, சிவப்பு (அவித்துப்பெறப்பட்ட) சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 94 ரூபாவாகும்.
வெள்ளை, சிவப்பு பச்சை, சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 94 ருபாவாகும்.
வெள்ளை, சிவப்பு (அவித்துப்பெறப்பட்ட) நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 92 ரூபாவாகும்.
வெள்ளை, சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் விலை 89 ரூபாவாகும்.
2003ம் ஆண்டின் 9ம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச்சட்டத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.