அலரிமாளிகை பூட்டு – உண்மை வெளியானது

0

பிரதமரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் கடமையாற்றும் ஊழியர்களை, தமது வீடுகளிலிருந்தே பணியாற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அலரிமாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை என, பிரதமரின் ஊடகச் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான போலி தகவல்களை வெளியிடுகின்றமையினால், பிரதமர் கூட நிர்க்கதிக்குள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எந்தவொரு விடயத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என கூறியுள்ள பஷில் ராஜபக்ஷ, இவ்வாறான போலி தகவல்களை வெளியிடுவதற்கு பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிற்கு அதிகாரம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகையிலுள்ள தனது அலுவலகம் கூட மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக தமது சந்திப்புக்கள் கூட வேறொரு இடத்தில் இடம்பெற்று வருவதாக பஷில் ராஜபக்ஷவை மேற்கொள்காட்டி, ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.