ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் இலங்கை! மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாய அமுல்

0

கோவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் மிகச்சரியான வேலைத்திட்த்தை அரசாங்கம் முன்னெடுக்க தவறி வருகிறது.

பொதுமக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அல்லது சுகாதார வழிமுறைகளை மீறும் விதத்தில் செயற்பட அனுமதித்தால் அடுத்த பத்து வாரங்களில் நாட்டில் பிரதான வைரஸ் தொற்றாக டெல்டா வைரஸ் தொற்று காணப்படுமென்று வைத்திய நிபுணர்கள் அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதேவேளை வைத்திய நிபுணர்களின் தொடர்ச்சியான எச்சரிக்கை உண்மையென ஏற்றுக் கொண்டுள்ள சுகாதாரப் பணியகம், கோவிட் 19 “டெல்டா” வைரஸ் பரவலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.