இடர் வலையங்களில் நிறுவன நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

0

இடர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிறுவன நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதனால் கடுமையான விதிமுறைகள் அமுலில் இருக்கும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படாது என்றும் ஆனால் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றும் கூறினார்.

மேலும் குறித்த பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தமது நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்கள் வைத்திருப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு நாளாந்த மற்றும் வாராந்த சந்தை, உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் ஆகியன நாளை திறக்கப்படாது என்றும் அவர் கூறினார்.