இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி நாட்டிற்குள் பிரவேசிக்கும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 30ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் வருகைக்குப் பின்னர் ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற விதி அடுத்த மாதத்திற்கு நீடிக்கப்படும் என்று இத்தாலிய அரசு கூறியுள்ளது.
பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு பரவல் பற்றிய கவலையின் மத்தியில் இத்தாலி அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிமைப்படுத்தல் விதி ஜூலை 30ம் திகதி முடிவடைகிறது,
எனினும், இங்கிலாந்திலிருந்து வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் உட்பட அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்ஸா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.