இலங்கைக்குள் நுழைந்த ஒமிக்ரோன் தொற்று! முதலாவது தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்

0

உலகின் பல நாடுகளுக்குள் தலைதூக்கியுள்ள கோவிட்டின் திரிபான ஒமிக்ரோன் தொற்றுடன் அண்மையில் இலங்கையிலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில்,அவர் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முதலாவது ஒமிக்ரோன் நோயாளி மத நம்பிக்கை காரணமாக தடுப்பூசி செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,நோயாளியுடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நோயாளியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்ணையும்,அவரது  கணவரையும் கண்டுபிடிப்பதற்கு பொது சுகாதாரப் பரிசோதகர்கள் முயற்சித்த போது அவர்கள் அருகில் உள்ள வீட்டில் மறைந்திருந்ததாகவும்தகவல் வெளியாகியுள்ளது.