இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் சடுதியாக அதிகரிப்பு

0

கோவிட் தொற்று உறுதியான மேலும் 619 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,039 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 345,118 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,563 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன்,கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 293,357 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.