இலங்கையில் சீரற்ற காலநிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம்!

0

இலங்கை கொவிட் -19 தொற்றிலிருந்து விடுபடாத நிலையில் சீரற்ற காலநிலையால் எதிர்வரும் மாதங்களில் டெங்கு நோயின் தாக்கமானது தீவிரமடையும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளரான அனுர ஜெயசேகர நேற்று தெரிவித்துள்ளார்.

“டெங்கு பரவுவதற்கான நிலைமை ஆபத்தானது அல்ல என்றாலும், வரும் மாதங்களில் மழை நிலைகள் தீவிரமடைந்து வருவதால் டெங்கு ஆபத்து அதிகரிக்கும்” என்று டாக்டர் ஜெயசேகர கூறினார்.

எனவே மக்கள் தங்களை சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருப்பதுடன், டெங்கு நுளம்பு பாரவாமல் இருக்கும் வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயியல் பிரிவு புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு ஜனவரி முதல் நாட்டில் மொத்தமாக 27,733 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 11,608 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர். இவ்வாண்டு இதுவரையும் டெங்குடன் தொடர்புடைய 30 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.