இலங்கையில் வரலாற்று மதிப்புள்ள பழங்கால குகை கண்டுபிடிப்பு

0

தென்னிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க பழங்கால குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, வலல்லாவிட பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட காட்டிற்கு நடுவில் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆணையர் பேராசிரியர் சேனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த இடம் தொல்பொருள் மதிப்புமிக்கதென ஊகிக்க முடிவதாகவும், முதலில் அந்த இடத்தின் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொள்வது அவசியம் எனவும் அதன் பின்னர் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க அதிபர் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிக்கு அருகே ஒரு பெரிய கல் குவாரி இயங்கி வருவதாகவும், குவாரி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளதாகவும் வலல்லாவிட பிரதேச செயலாளர் எம்.ரஞ்சன் பிரியசாந்த பெரேரா தெரிவித்தார்.

அதற்கமைய குகைக்கு அருகில் உள்ள கல் குவாரியல் கல் உடைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுப்பட்டுள்ளது.

இந்த இடம் குறித்து மக்கள் கருத்து வெளியிடும் போது, 70 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வந்த புரம்பி சின்ஜோ என்ற ஒரு நபர் இந்த குகையில் வசித்து வந்துள்ளார், பின்னர் அவர் குகைக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.

குகைக்கு அருகில் நீர் உள்ள ஆழமான கிணறு ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.