இலங்கை அணி மூன்று வீரர்களுக்கு ஒரு வருட சர்வதேச போட்டி தடை − தலா 10 மில்லியன் அபராதம்

0

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, சுகாதார நடைமுறைகளை மீறி, இரவு வேளையில் நடமாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு, அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாட ஒரு வருட கால தடை விதிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கே இந்த போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒவ்வொரு வீரருக்கும் தலா 10 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மேலும், உள்நாட்டு போட்டிகளில் விளையாட, குறித்த மூன்று வீரர்களுக்கும் 6 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.