இலங்கை ஆபத்தான கட்டத்தில் சிக்கியுள்ளதா? புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை

0

அண்மைக்காலமாக கண்டியில் ஏற்படும் நில அதிர்வினால் பாரிய பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கண்டி, திகன உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல முறை ஏற்பட்ட நில அதிர்வு, மனித செயற்பாட்டினால் உருவானது அல்ல, அதனை சாதாரணமாக நினைக்க முடியாதென புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக இயக்குனர் பொறியியலாளர் சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்திற்கு அருகில் பல முறை ஏற்பட்ட நில அதிர்வுகளை கருத்திற்கொள்ளாமல் விட கூடிய விடயம் அல்ல. சிறிய நில அதிர்வாக பதிவாகினாலும் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற நில அதிர்வு கண்டி பல்லேகலை நில அதிர்வு அளவீட்டில் தெளிவாக பதிவாகியுள்ளது. அத்துடன் மஹகனதார ஓய மற்றும் ஹக்மன நில அதிர்வு அளவீட்டில் சிறிதளவில் பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு நிலைமை சுன்னாம்பு கல் அகழ்வினால் ஏற்படுவதாக கூறப்பட்டது. இருந்த போதிலும், அதனை உறுதியாக கூற முடியாதென தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்வதாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து நினைத்து கூட பார்க்க முடியாது.

எனினும் தொடர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.