இலங்கை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்? சுகாதார பிரிவு வெளியிட்ட தகவல்

0

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் பயனை அடைய மேலும் இரண்டு வாரங்கள் நாடு முடக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றினால், புதிதாக உருவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து நாட்டை மீண்டும் திறக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர் நடுப்பகுதிக்குள் நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தி விட்டால் ஒக்டோபர் மாதம் இறுதிக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாறுபாடு நாட்டில் பரவியன் காரணமாக தினசரி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.