இலங்கை மக்களிடம் இராணுவ தளபதி விடுக்கும் கோரிக்கை

0

நாட்டில் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்மானிக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பாட்டால் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கும் அதிக காலம் நாட்டை மூடி கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம். மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு அவதானமிக்க முறையில் செயற்பட வேண்டும்.

நாட்டை மூடியே வைக்க முடியாது. கடந்த காலங்கள் முழுவதுமாக மக்கள் வழங்கிய ஆதரவிற்கமைய தொற்றினை கட்டுப்படுத்த முடிந்தது.

இந்த காலப்பகுதிகளிலும் அதே போன்று அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே நாட்டை நடத்தி செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அரச ஊழியர்களின் பணிகள் இன்று முதல் வழமையான முறையில் நடத்தி செல்லப்படவுள்ளது. மேலும் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.