இலங்கை வான்பரப்பில் தென்பட்ட மர்ம உயிரினம்!

0

இலங்கையின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்த காணொளி ஒன்றும் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

குறித்த மர்மஉயிரினம் ஹம்பாந்தொட, திருகோணமலை, நுவரெலியா உட்பட பல பிரதேசங்களிலும் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.