உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது குறித்து இரண்டு வகைத் திட்டங்கள் பரிசீலனை

0

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகள் திறக்கப்படும் போது முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நடத்தப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது பாடத் திட்டத்தின் அடிப்படையில் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதுகுறித்த இறுதி முடிவு குறித்து கல்வி அமைச்சு விரைவில் அறிவிக்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.