உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து வெளியான தகவல்

0

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ், இம்முறை உயர்தர பரீட்சைகளுக்காக தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் இன்று (21) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடவிதானங்கள் உரிய முறையில் நிறைவடையவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சு இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துடன் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.