உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது

0

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவர்களில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் 81 சந்தேகஎநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.