உறவினர்கள் ஏற்க மறுக்கும் கொவிட் பூதவுடல்களை அரச செலவில் தகனம் செய்ய தீர்மானம்

0

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை உறவினர்கள் அல்லது பொறுப்பாளர்கள் ஏற்க மறுக்கும் பட்சத்தில், அந்த பூதவுடலை அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்ய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படாத மேலும் சில பூதவுடல்கள் அரச வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, அவ்வாறான பூதவுடல்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பூதவுடல்களை தகனம் செய்வதற்கு செலவிடப்படும் செலவீனத்தை, இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வழங்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.