உலகப் பெருங்கடல் தினம் இன்றாகும்!

0

கடல் சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உலகப் பெருங்கடல் தினத்தினை பிரகடனம் செய்துள்ளது.

உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்வின் பிழைப்புக்கு நேரடியாக பங்களிக்கும் கடல் சுற்றுச்சூழல் பல்வேறு மனித நடவடிக்கைகளால் மாசுபடுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

பெருங்கடல்களில் மாசுபாடு சேர்க்கப்பட்டால், அதை சரிசெய்ய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை. இதன் தாக்கம் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களையும், முழு கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் நேரடியாக பாதிக்கும்.

கொழும்புக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் கப்பலால் ஏற்பட்ட சேதத்தை இழப்பீடு மூலம் மதிப்பிட முடியாது.

இந்து சமூத்திரத்தின் முத்து என புகழப்படும் தாய்நாட்டின் உயிர்வாழ்விற்கும் அழகிற்கும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பெருங்கடல் தினத்தை ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் திகதி கடைப்பிடிக்க வேண்டும் என, 1992-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் கனடாவால் முதன்முறையாக வலியுறுத்தப்பட்டது.

அதன்பிறகு பல நாடுகளில் இந்த தினம், அதிகாரப்பூர்வமற்ற வகையில் அனுசரிக்கப்பட்டு வந்தது.

2008-ம் ஆண்டு ஐநா சபையால், இந்த தினம் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. அது முதல் ஆண்டு தோறும் ஜூன் 8ஆம் திகதி ‘உலகப் பெருங்கடல் தினம்’ ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது.